தூத்துக்குடி மாவட்டத்தில் காந்தி அமைதிப் பரிசு பெற தகுதி வாய்ந்த நபர்கள் வருகிற 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாத்மா காந்தி 125ம் பிறந்த ஆண்டை கொண்டாடும் வகையில் 1995 முதல் காந்தி அமைதி விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2018ம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது வழங்கப்படவுள்ளது.
இவ்விருது பெற சமுதாய, பொருளாதார மாற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றியவர்கள், அகிம்சை முறையில் அரசியல் மாற்றித்திற்கு வித்திட்டவர்கள், சமூக நீதி மற்றும் நல்லிணக்கம் இவற்றிற்கு சிறப்பான பங்களிப்பையாற்றியவர்கள் ஒரு தனி நபரோ, நிறுவனமோ தகுதியானவர்கள். இவ்விருது பெற தகுதியானவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. இவ்விருதிற்கு வயது, தேசியம், இனம், சமயம் மற்றும் பாலினம் தடையில்லை.
2018-ம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசுக்கு தகுதி வாய்ந்த சிறந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் இந்த விண்ணப்பங்களை www.indiaculture.nic.in இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அமைதிப் பரிசுக்கான விபரங்கள் (Instructions) அனைத்தும் வெப்சைட்டில்; உள்ளது.
எனவே 2018-ம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு பெற தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 12.04.2018 மாலை 5-00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் ஒப்படைக்க வேண்டும்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.
மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு. ,
தூத்துக்குடி 628 001.


