வல்லநாட்டில் மனமகிழ் மன்றம் சார்பில் நடந்த காயகல்ப பயிற்சியை நடிகர் டெல்லி கணேஷ் பங்கேற்று அவர் பேசினார். அவர் பேசும் போது கற்புடைய பெண்கள் தமிழகத்தில் வாழ்வதால் தான் மழை பொழிகிறது என பேசினார்.
வல்லநாட்டில் ஐவர் ராஜா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மண்டலமன மகிழ் மன்ற செயலாளர் அரசு ஈஸ்வரர் வரவேற்றார். துணை தலைவர் சந்திரசேகரன் வாழ்த்தி பேசினார். நடிகர் டெல்லி கணேஷ் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் டெல்லி கணேஷ் பேசும்போது,
வல்லநாடு கிராமத்தில் பிறந்தவர் தான் அழியாறில் மனமகிழ் மன்றத்தினை கட்ட பொறியாளராக பணியாற்றியவர். அதே போல் இவ்வூரில் படித்தவர் தான் சவுதி அரேபியாவில் இந்தியன் பள்ளி முதல்வராக பணியாற்றினார். அந்த காலத்தில் மும்மாரிமழை பொழிகிறதா என அரசர் கேட்டார். அதில் முதல் மாரி, இறைவனுக்காக சேவை செய்யும் அந்தணர்களுக்காக பொழியும் மழை, இரண்டாவது மாரி கற்புடைய பெண்களுக்காக பெய்யும் மழை, மூன்றாவது மாரி ஆளும் அரசருக்காக பெய்யக்கூடிய மழை, அந்த காலத்தில் மூவரும் சிறப்பாக வாழ்ந்தனர் மும்மாரி மழை பெய்தது. இப்போதைய நிலை அப்படி அல்ல, கற்புடைய பெண்கள் தமிழகத்தில் 99 சதவீதம் பேர் உள்ளனர். அதனால் மட்டும் தான் மழை பெய்கிறது. மற்றபடி எதுவுமே சரியில்லை. நாம் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கூட சொந்த மண் என்றால் சந்தோஷமாக ஓடி வரத்தான் தோன்றுகிறது. அது தான் எனக்கு என் மண்ணுக்கு உள்ள உறவு என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் வகுப்புகளை நடத்தினார். நிகழ்ச்சியில் நாராயணன், சட்டநாதன், லெட்சுமணன், பாரதி சங்கரலிங்கம், செல்லத்துரை, பொன்திருவடி உள்பட பலர் கலந்துகொண்டனர். அறக்கட்டளை செயலாளர் சண்முகவேலன் நன்றி கூறினார்.


