வல்லநாடு தம்பிராட்டி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு கால் நாட்டப்பட்டது.
வல்லநாடு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் தம்பிராட்டி அம்மன் கோயில் . இந்த கோயிலில் 10 நாள் கொடைவிழா மிகச்சிறப்பாக நடைபெறும் . இதையொட்டி கால்நாட்டு விழா நடை பெற்றது. இதையொட்டி காலையில் நடை திறக்கப்பட்டது. பின் அம்மனுக்கு அபிசேகம் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம் நடந்தது. அதன் பின் கால்நாட்டு விழாநடந்தது.
இதற்கான மண்டக படியை வல்லநாடு பிரமாணர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர். இந்தநிகழ்ச்சியில் முன்னாள் வங்கி அதிகாரி முத்துகிருஷ்ணன், நடிகர் டெல்லி கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். வருகிற 8 ந்தேதி தம்பிராட்டி அம்மன் கோயில் கொடை விழா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


