உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப்பகுதியில் உள்ள அமலைச் செடிகள் அகற்றம்.
உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் அமலைச்செடிகள் அகற்றும் பணி நடந்தது.
ஸ்ரீவைகுண்டத்தில் இன்று உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த அமலைச்செடிகளை அகற்றும் பணி நடந்தது. கிராம உதயம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கம் சார்பில் இந்த அமலைச்செடிகள் அகற்றினர். ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள் இந்த அமலைச்செடிகளை அகற்றும் பணியினை துவக்கி வைத்தார்.


