தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (70). இவர் பனை ஏறி பனையில் இருந்து பதநீர் இறக்கி அதனை காய்த்து கருப்புக்கட்டி எடுத்து விற்பனை செய்து வருகிறார்.
வழக்கம்போல் இன்று காலை 4.30 மணி அளவில் பனை ஏறுவதற்காக வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். காலை 8 மணி ஆகியும் அவர் வராத காரணத்தால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை பனை காட்டுப்பகுதியில் தேடிச் சென்றனர். அப்போது ஒரு பனையில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.
இதுகுறித்து உடனே செய்துங்கநல்லூர் காவல்நிலையத்திற்கு அவரது உறவினர்கள் தகவல் கொடுத்தனர். போலிசார் உடனே வந்து அவரை திருநெல்வேலி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பனை தொழில் நலிவடைந்து வரும் நிலையில் பனை தொழிலாளர் பனையில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.