
ஸ்ரீவைகுண்டத்தில் மத்திய அரசைப்போன்று மருத்துவப்படி ரூ.300க்கு பதிலாக ரூ.1000ம் வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட ஓய்வூதியர்கள் சங்க மாதாந்திர கூட்டம் தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் செல்லையா முன்னிலை வகித்தார். பொருளாளர் துரைராஜ் வரவு & செலவுகளை வாசித்தார். கூட்டத்தில், மருத்துவகாப்பீட்டு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே நடத்தவேண்டும், மத்திய அரசைப்போன்று மருத்துவப்படி ரூ.300க்கு பதிலாக ரூ.1000ம் வழங்கவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், செயற்குழு உறுப்பினர்கள் சங்கரன், சங்கரகாந்தி, ராஜ தேவமித்திரன், சொர்ணமாடாசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், துணைத்தலைவர் ராஜப்பாவெங்கடாச்சாரி நன்றி கூறினார்.