தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
தொகுதிச் செயலாளர் இரா.பட்டாணி, தொகுதித் தலைவர் ஜேசுத்துரை ஆகியோர் தலைமை வகித்தனர். ஆழ்வை மேற்கு ஒன்றியச் செயலாளர் சுடலை, தொகுதி துணைத் தலைவர் சிலுவை, வீரத்தமிழர் முன்னனிச் செயலாளர் ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன், தெற்கு மாவட்ட பொருளாளர் ஜெயவானமாமலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு, நிதிக்குழு அமைக்கப்பட்டது, ஸ்ரீவைகுண்டம் தொகுதி செய்தித் தொடர்பாளராக முத்துராமன் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி சுற்றுச் சூழல் பாசறைச் செயலாளராக லெட்சுமி நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, கிளைப் பொறுப்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


