டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் அமமுகவினர் சிறப்பு பூஜை.
அம்மா மக்கள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் 57 வது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வெங்கடேசபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் மனோகரன் தலைமையில் தாங்கினார. கருங்குளம் ஒன்றியச்செயலாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். உடன்குடி ஒன்றிய செயலாளர் அம்மன் டி நாராயணன், அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் ஏரல் ரமேஷ் உள்பட ஸ்ரீவைகுண்டம் பகுதி அமமுக கட்சியினர் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். அதன்பின்னர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


