.
நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்தது.
இதனை கொண்டாடும் விதமாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஜாரில் கருங்குளம் ஒன்றியச் செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கையில் குக்கருடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் டாகடர் கோசல்ராம், மருத நாயகம், கொம்பையா, முருகன், எண்ணாயிரத்தான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


