ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் தொடக்கப்பள்ளியில் ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கம் சார்பில் உலக சுற்றுசூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் மாணவ மாணவியர்களுக்கு சுற்றுசூழல் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
மேலும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் பள்ளியின் சார்பில் சங்கத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக வழங்கினார்கள். தலைமை ஆசிரியர் ராணி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.