மணக்கரையில் நடந்த மாட்டு வண்டி போட்டியில் மருகால்குறிச்சி சுப்பம்மாள் வண்டி முதல் பரிசு பெற்றது.
மணக்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற மலை பார்வதி அம்மன் கோயில் கொடைவிழா நடந்தது. இதையொட்டி இன்று காலை மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, குதிரைவண்டி பந்தயம் நடந்தது.
முதலில் பெரிய மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் 10 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. மணக்கரை தனியார் குளிர்பான கம்பேனி முன்பு துவங்கி இந்த போட்டிக்கான வண்டிகள், வல்லநாடு வரைசென்று திரும்பியது. இதில் முதல்கொடியை மருகால்குறிச்சி வண்டி பெற்றது. முதல் பரிசையும் மருகால்குறிச்சி வண்டியே பெற்றது. முதல் பரிசு 20 ஆயிரத்தினை வைகுண்டபாண்டியன் வழங்கினார்.
இரண்டாம் பரிசு 11 ஆயிரத்தினை ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் சார்பாக மருகால்குறிச்சி பொன்னுக்கு வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு 11 ஆயிரத்தினை திருப்பதி வடக்கு காரசேரி கனகராஜ்க்கு வழங்கினார். முதல் கொடிக்கான பரிசை சீனி பாண்டியன் வழங்கினார்.
சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 15 வண்டிகள் கலந்து கொண்டது. மணக்கரை பஸ் நிலையத்தில் இருந்து துவங்கி, வல்லநாடு வரை தொலைவு நிர்ணயக்கப்பட்டிருந்தது. முதல் பரிசு 15 ஆயிரத்தினை தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி திட்டக்குழு தலைவர் உதயசூரியன் வழங்கினார். வெள்ளூர் எஸ்.ஆர். முத்தையா பெற்றார். மருதூர் கீழக்கால் சங்கத்தலைவர் சீனிப்பாண்டியன் இரண்டாம் பரிசு 11 ஆயிரத்தினை வழங்கினார். மருகால் குறிச்சி சுப்பம்மாள் இரண்டாம் பரிசை பெற்றனர். மூன்றாம் பரிசை நாலாத்தூர் உதய பாண்டியன் வழங்கினார். இதற்கான 9 ஆயிரத்தினை பத்பநாபமங்கலம் முண்டசாமி வழங்கினார். வெள்ளூர் எஸ்.ஆர். முத்தையா முதல் கொடிக்கான பரிசை பெற்றார். இதற்கான பரிசு ரூ 700 யை பொன்பாண்டியன் வழங்கினார்.
குதிரை வண்டி போட்டியில் 11 வண்டிகள் கலந்துகொண்டன. முதல் பரிசு அவினாப்பேரி பாண்டித்தேவர் வண்டி பெற்றது. இதற்கான பரிசு தொகை 10 ஆயிரத்தினை அசோகன் வழங்கினர். இரண்டாம் பரிசை வைகுண்ட பாண்டியன் வண்டி பெற்றது. இதற்கான 7 ஆயிரத்திதினை ரேவதி கந்தசாமி வழங்கினார். மூன்றாம் பரிசு மலைபார்வதிஅம்மன் மணக்கரை 5 ஆயிரத்தினை பன்னீர்வேல், மாரியப்பன் ஆகியோர் வழங்கினார். மலைபார்வதி அம்மன் மணக்கரை முதல் கெடிக்கான 500 ரூபாயை சண்முகசுந்தரம் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை மணக்கரை மலைபார்வதி அம்மன் கோயில் கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.