புத்தாண்டு பிறந்த பிறகு நான் செய்திகளை பதிவிட வில்லை. காரணம் 1 ந்தேதி நான் பார்த்து அதிசயத்த மனிதரை பற்றி பதிவுசெய்து விட்டே அடுத்த பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அந்த பதிவுக்கு சொந்த காரர் பாஸ்டர் டைட்டஸ் ஞானசித்தர். இவர் இந்திய தேவ சபைக்கு தென் பகுதி பொறுப்பாளர். வசவப்பபுரம், கருங்குளம் பகுதியில் விபத்து ஏற்பட்டால் அவரது இலவச வாகன சேவை உண்டு. முதியோருக்கு பராமரிப்பு இல்லம் நடத்தி வருகிறார். தினமும் நெல்லை சந்திப்பில் சுமார் 25 மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இதுபோன்ற பல சேவைகள் இவர் செய்து வருகிறார்.
இறைபணியுடன் சமூக பணியாற்றி வருபவர். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ஜனவரி முதல் நாள் எங்களை விருந்துக்கு கூப்பிடுவார். நான் செல்லாமலேயே இருந்தேன். ஆனால் இந்த வருடம் எப்படியும் போய்விட்டு வரவேண்டும் என்று சென்றேன்.
அங்கே நான் கண்ட காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அங்கு சுமார் 1000 பேருக்கு விருந்து உபசரணை நடந்துகொண்டிருந்தது. அதில் அதிகமான நபர்கள் இந்து மதத்தினை சேர்ந்தவர்களாகத் இருந்தார்கள். பணக்காரர் ஏழை, உறவினர்கள் மற்றவர்கள் என்ற சிந்தனையே இல்லாமல் சமபந்தி விருந்து நடந்து கொண்டிருந்தது.
சமூக ஒற்றுமைக்கு இலக்கணமாகவே இந்த விருந்து நடந்து கொண்டிருந்தது. நானும் அவர்களோடு அமர்ந்து உணவு உண்ட அந்த தருணம் என் வாழ்வில் கிடைக்காத பேரின்பம் கிடைத்ததை உணர்ந்தேன்.
வாழ்த்துக்கள் பாஸ்டர் டைட்டஸ் ஞானசித்தர் அவர்களே . உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும், உதவி புரிந்து வரும் குடும்பத்தாருக்கும், உங்கள் நண்பர்களுக்கும், சபை விசுவாசிகளுக்கும் நன்றி.. நன்றி.. வாழ்த்துக்கள்.