தூத்துக்குடியில் புத்தக கண்காட்சியை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷூ மகாஜனை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் எழுத்தாளர்கள் சந்தித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தக கண்காட்சியை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் கருங்குளம் சம்பன்குளத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் எக்ஸ்னரோ நிறுவனம் இணைந்து தூர்வாரினார்கள்.
கோவில் நகரமான அவ்விடத்தினை அழகுபடுத்தி நடைபயிற்சி பாதை அமைத்து, படித்துறைகள் அமைத்துத் தர வேண்டும் என்றும், தாமிரபரணி ஆற்றில் முள்செடி அகற்றும் பணியை ஆட்சியர் பார்வையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சித்தலைவர் ஆவன செய்வதாக வாக்களித்தார். அப்போது முனைவர் மணிமொழிச்செல்வன், எழுத்தாளர் மாரிமுத்து, ஆவணப்பட இயக்குநர் அருந்ததி அரசு, கிராம உதயம் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த செல்வின் துரை, ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


