புத்தக கண்காட்சியில் நெல்லை பற்றிய பாடல் எழுத உதவிய எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கௌரவிக்கப்பட்டார்.
நெல்லை புத்தக கண்காட்சி துவக்கவிழா பாளை வ.உ.சி மைதானத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பழனி வரவேற்றார். ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் ராஜ லெட்சுமி குத்துவிளக்கேற்றி , திருநெல்வேலி புகழ்பாடும் ‘நெல்லை கீதம்’ என்னும் இசை நாடாவை வெளியிட்டார். பாடலை பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடியிருந்தார். இந்த ஒலிநாடாவை எழுதி இசை அமைத்த இசக்கியப்பன், உதவி புரிந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ,மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கௌரவப் படுத்தப்பட்டனர் . முன்னதாக இந்த பாடலுக்கு சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளி மாணவர்கள். புஷ்பலதா பள்ளி மாணவர்கள் நடனமாடினர். கண்கவர் நடத்தினை பார்வையாளர் பார்த்து பரவசமடைந்தனர்.
அதன் பின் புத்தக கண்காட்சியை துவக்கி வைக்கப்பட்டது. பயிற்சி கலெக்டர் இளம் பகவத் சிங், நெல்லை மாவட்ட எம்.எல்.ஏக்கள், எழுத்தாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.