இது குறித்து தெற்குரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது,
விருதுநகர்-சாத்தூர் மற்றும் திருப்பரங்குன்றம்-கள்ளிக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதற்கு வசதியாக வண்டி எண் 56769 பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் வண்டி எண் 56770 திருச்செந்தூர் – பாலக்காடு ரயில் 15.8.2018 முதல் 31.8.2018 வரை திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விருதுநகர் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மதுரை – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மாற்றங்கள் 20.8.2018 திங்கட்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டு பயணிகள் வசதிக்காக இந்த ரயில்கள் பாலக்காடு – திருச்செந்தூர் இடையே முழுமையாக வழக்கமான நேரங்களில் இயக்கப்படும்.என அறிவிக்கப்பட்டுள்ளது.