
சாத்தான்குளம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அது கவரிங் நகை என தெரிந்ததால் பெண்ணை தண்ணீரில் மூழ்கடித்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பிள்ளைவிளையை சேர்ந்தவர் வசந்தி வயது (57). இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், இன்று காலை வீட்டின் வெளியே வசந்தி நின்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது அவர் எதிர்பாராத நிலையில் அவரது கழுத்தில் கிடந்த நகையை பறித்துள்ளனர். கடும் போராட்டத்திற்கு இடையே நகை பறித்த கொள்ளையர்கள் நகையை சோதித்ததில் கவரிங் நகை என தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அந்த பெண்ணை தாக்கி அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளார்கள் ஒடி வரவே கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து வசந்தி மெஞ்ஞானபுரம் காவல் நிலைத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவரிங் நகை என தெரிந்து கொள்ளையர்கள் பெண்ணை கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.