தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கடலோரப் பகுதி. இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்ட பைப்பர் படகு மூலம் தினமும் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.
இன்று மாலை பெரியதாழை மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியில் தூத்துக்குடி மீனவர்கள் 9 பேர் ஒரு விசைப்படகில் வந்து மீன் பிடித்தனர். இதனால் பெரியதாழை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக விரித்திருந்த அனைத்து மீன்வலைகளும் சேதமடைந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பெரியதாழை மீனவர்கள் 9 மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகையும் சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் 9 மீனவர்களையும் விடுவித்தனர். விசைப்படகை மட்டும் சிறைபிடித்தனர். மேலும் சேதமடைந்த மீன்வலைகளுக்கு இழப்பீடு வழங்கினால் மட்டுமே விசைப்படகை விடுவிடுப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.