திருநெல்வேலி மாவட்டத்தை போல தூத்துக்குடி மாவட்டத்திலும், தாமிரபரணி நதிக்கரையில், மாணவர்கள், சமூகநல ஆர்வலர்கள், பொதுமக்கள் உதவியுடன், உடனடியாக சீரமைப்புப் பணிகள் தூய்மை பணிகள், மேற்கொள்ள வேண்டும் என மதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் வற்றாத ஜீவ நதியாக தாமிரபரணிநதி விளங்கி வருகிறது. இந்த நதிநீர் பல லட்சக்கணக்கான பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைகள், மற்றும் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாய பணிகள், பல்வேறு தொழிற்சாலை பணிகள் மற்றும் பல்வேறு பொதுமகக்ள பிரச்சனைகளுக்கு பயன்பட்டு வருகிறது.
தாமிரபரணி நதியில் பல ஆண்டுகளாக, கரைப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு, பல்வேறு பகுதிகளில் சாக்கடை நீர் கலப்பது, தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பது, நதியின் கரைப்பகுதிகளில் கருவேலமரங்கள், மற்றும் மாசுக்கள் உருவாக்கும், மரம், செடி, கொடிகள், நிறைந்து காணப்படுவதால், நதிநீர் தனது சுத்தமான சுகாதாரமான தன்மையை இழந்து, வருகிறது. இதனால் பொதுமக்களிடம் இந்த நதி அழிந்து விடுமோ, எனவும் விவசாயப் பணிகள் முற்றிலும் நடைபெறாமல், நிலங்கள் பாலைவனமாகி விடுமோ, எனவும், கடைசியில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தாங்கள் தாமிரபரணி நதியை பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களின் அச்ச உணர்வுகளை போக்கிடும் வகையிலும் தாமிரபரணி நதியை குறித்து. பொது மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கும் வகையிலும், தாமிரபரணி நதியை சீரமைக்கும் பணியை இந்த கோடைக் காலத்தில், போர்ககால நடவடிக்கையை போல் மிகவிரைவாக தொடங்கிட வேண்டுமென பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி நதியை, மாணவர்கள், பொதுமக்கள். விவசாயிகள். சமூக ஆர்வலர்கள். பொதுநல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் போன்ற பல்லாயிரக்கணக்கானவர்களை கொண்டு, அடிக்கடி தாமிபரணி நதியை சீரமைக்கும் பணி, தூய்மையாக்கும் பணிகள், தேவையற்ற மரங்கள், செடிகள், கொடிகளை அகற்றி சுத்தமாக்கும் பணிகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவும் மேற்கண்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்திலும் மேற்கண்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்து, பொதுமக்களின், குடிநீர் பிரச்சனைகள், விவசாய பணிகள், தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உதவிடும் வகையில் அடிக்கடி மேற்கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.