தனியார் பஸ்ஸை விட அதிகமாக கட்டணம் வசூல் செய்யும் அரசு பஸ் & பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பஸ் கட்டண உயர்வு காரணமாக போரட்டம் நடந்து வருகிறது. ஆனால் பஸ் கட்டணத்தினை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது போல தெரியவில்லை. இதற்கிடையில் அரசு டவுண் பஸ்ஸில் தனியார் பஸ்ஸை விட அதிகமாக பணம் வசூல் புகார் எழுந்துள்ளது.
செய்துங்கநல்லூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் குர்னிகல் சிங் நகர், தமிழன் நகர், தூதுகுழி, கிழதூதுகுழி போன்ற ஊர் உள்ளது. இங்கிருந்து மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் உள்பட பொதுமக்கள் அத்தியவாசியமான தேவைகளுக்கு செய்துங்கநல்லூர் வரவேண்டியது உள்ளது.
பஸ் கட்டணம் உயரும் முன்பு குர்னிகால்சிங்நகரில் இருந்து தனியார் மற்றும் அரசு டவுண் பஸ்ஸில் 5 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது பஸ் கட்டண உயர்வுக்கு பின்பு தனியார் பஸ்ஸில் 6 ரூபாயும், அரசு டவுண் பஸ்ஸில் 8 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதனால் இங்கிருந்து கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பஸ் கட்டணம் கூடினால் அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஒரே கட்டணம் தான் கூட வேண்டும். ஆனால் தனியார் பஸ்ஸை விட அரசு பஸ்ஸில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது எந்தவிதத்தில் நியாயம் என கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து த.மா.கா கருங்குளம் ஒன்றிய இளைஞரணி தலைவர் கரையடியூர் கணேச பாண்டியன் கூறும் போது, பஸ் கட்டணம் கூடியிருப்பது சாதரண கூலி வேலைசெய்யும் தொழிலாளர்களை மிகவும் பாதித்துள்ளது. மேலும் தனியார் பஸ்ஸை விட அரசு பேருந்துகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது கண்டனத்துக்குரியது. எனவே உடனே பஸ் கட்டணத்தினை குறைக்காவிடில் செய்துங்கல்லூரில் பொதுமக்களை திரட்டி பஸ்ஸில் அரசு பஸ்களில் அவர்களை ஏற்றி டிக்கெட் எடுக்காமல் நூதன போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
மக்கள் பிரச்சனை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பஸ் கட்டணத்தினை குறைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.