செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
குழந்தைகள் நல மருத்துவர் நந்தினி போஸ் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன், பள்ளி நிர்வாகிகள் ஓ.பி.முஸ்தபா, மீரான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார். தோட்டிலோவன் பட்டி அறிவியல் ஆசிரியர் ரகுமத் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஜெய்தூன் பீவி ஆண்டறிக்கை வாசித்தார். ஓய்வு பெற்ற சதக்கப்துல்லா அப்பா கல்லூரி வரலாற்று பேராசரியர் சாகீர்தா பேகம் சிறப்புரையாற்றினார்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி கண்ணா பள்ளி தாளாளர் ஸ்ரீவாசன், வழக்கறிஞர் பிச்சுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ஆறுமுகம், கிருஷ்ண லெட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஆசிரியை பானுமதி நன்றி கூறினார்.