சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் ரோபோ மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்து, கண்காட்சியை திறந்து வைத்தார். பள்ளி முதல்வர் நோபுள்ராஜ், துணைமுதல்வர் சந்தனக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சிபி ஆரம்ப ஜெபம் செய்தார். தலைமையாசிரியர் பங்கராஸ் வரவேற்றார்.
இதில் மாணவர், மாணவிகள் தயாரித்த ஸ்மார்ட் ரோபோ மற்றும் அறிவியல் பொருள்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. இதில் முதல் மூன்று படைப்புகளைத் தேர்ந்தெடுக்க திசையன்விளை வி.வி.பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் சிவசுப்ரமணியன், இம்மானுவேல், அகஸ்டியா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த படைப்பாக தேர்வு பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்று வழங்கப்பட்டன.
இதில் ஆசிரியர்கள் சாந்தி, ஜெயராணி, ஜெயசுதா, ஜான்சி, கிளைட்டன், மணிமேகலை, குயின்ஷிபா, செல்வபழம், பிரிட்டோ, இம்மானுவேல், சுப்பையா, பெனோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் சாந்தி தலைமையில் அறிவியல் ஆசிரியர்கள் லிலிங்கத்துரை, லூடஸ், சுவீனா, உஷா, ராம்பிரசாத், பிங்கி ஆனந்தி ஆகியோர் செய்திருந்தனர்.