கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம், செஞ்சுருள் கழகம் மற்றும் நெல்லை நம்பிக்கை அற்கட்டளை ஆகியவை சார்பில், மாணவர்களிடையே எச்ஐவி விழிப்புணர்வு மற்றும் போதை பழக்கங்களின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், நம்பிக்கை அறக்கட்டளை இயக்குநர் சுரேஷ், அறக்கட்டளை காப்பாளர் ஜனனி சுரேஷ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
நிகழ்ச்சியில், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ராஜாபாபு, சோபா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.