தமிழ்நாடு இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் மதுரையில் வேல் சங்கமம் நிகழச்சி வருகிற 29 ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து குடும்பத்தை காக்கும் குமரவேலும், திருச்செந்தூரில் இருந்து சத்ருசம்கார வீரவேலும், பழனியில் இருந்து விவசாயத்தை காக்கும் மருதவேலும், சுவாமி மலையில இருந்து கல்வியில் சிறந்து விளங்க ஞானவேலும், திருத்தணியில் இருந்து ஆரோக்யமாக வாழ தணிக்கை வேலும், பழமுதிர் சேலையில் இருந்த இயற்கை வளம் பெற சோலைவேலும் தமிழகத்தினை சுற்றி வருகிறது. நேற்று நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் இருந்து வேல் யாத்திரை கிளம்பியது.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் இந்த வேலுக்கு கருங்குளம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய தலைவர் பெரிய சாமி தலைமை வகித்தார். மாவட்ட பொதுசெயலாளர் சக்திவேல் மாவட்ட பொறுப்பாளர் மாரியப்பன், இந்து முன்னணி இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் தரிசம் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல், உமரிக்காடு, முக்காணி வழியாக தூத்துக்குடி சென்றடைந்தது. இன்று (29ந்தேதி) இந்த வேல் யாத்திரை மதுரைக்கு கிளம்பி செல்கிறது. இன்று மாலை 6 மணிக்கு மதுரையில் வேல் பிரதிட்சை நடைபெறவுள்ளது.


