சாத்தான்குளம் தாலுகா பழனியப்பபுரத்தில் இருந்து டிகேசி நகர் வரை உள்ள சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
சாத்தான்குளம் தாலுகா பழனியப்பபுரத்தில் இருந்து – கட்டாரிமங்களம், அம்பலசேரி, அறிவான்மொழி,தேரிப்பனை டி.கே.சி நகர் சாலையானது கடந்த 5ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தினமும் நாசரேத்தில் இன்ஜீனியரிங், பாலிடெக்னிக் கல்லூரி, கலைக்கல்லூரி, சமுதாய கல்லூரி, நர்சிங் கல்லூரி, மற்றும் பள்ளிகளுக்கு என தினமும் மாணவ,மாணவியர்களும், இதர வாகனங்களும் சென்று வருகின்றனர். கிராமபுற பகுதியில் இருந்து சாலைப்புதூர்,ஆசீர்வாதபுரம் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களும் வந்து செல்கின்றனர். இந்த தினசரி கிராம மக்கள் ஆயிரகணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் சில நேரம் அரசு பேருந்துகளும் இந்த வழியாக வராமல் வேறு பாதைக்கு சென்று விடுகின்றனர். இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி விழுந்து காயமடையும் நிலை தொடர்கிறது. இதே போல் நாசரேத்திற்கு செல்லும் மற்றொரு சாலையான அம்பலசேரி, சின்னமாடன்குடியிருப்பு, உடையார்கு ளம், வெள்ளமடம் சாலையும் மோசமாக உள்ளது என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.எனவே நெடுஞசாலைத்துறை அதிகாரிகள் சிறப்பு கவனம் கொண்டு குண்டும், குழிகளை சீரமைத்து புதிய சாலையாக அமைத்த இச்சாலையை இருவழிச் சாலையாக மாற்றி வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.