ஏரல் மளிகை கடையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பண்டல் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு நடந்துள்ளது.
ஏரல் அருகே உள் வாழவல்லான் சென்னல்மாநகரைச் சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார் (36). இவர் ஏரல் கீழக்காட்டு ரோட்டில் ஷாப்பிங் சென்டர் நடத்தி வருகிறார். கடையின் மேலே வீடு உள்ளது. அதில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை அவர் வழக்கம்போல் கடையை திறக்குமு போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. ரூபாய் 10 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.
கடையின் சிசிடிவி கேமரா இணைப்பை துண்டித்துவிட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் கடையில் வைத்திருந்த ரு.3 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பண்டல்களும், ரூ.10 ஆயிரம் ரொக்கமும் திருட்டு போயிருந்தது. கொள்ளையர்கள் சிகரெட் பண்டல்களை வாகனத்தில் தான் ஏற்றி சென்றிருக்கக்கூடும் என தெரிகிறது.
இதுகுறித்து ஏரல் போலிசில் புகார் செய்யப்பட்டு போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.