இரண்டு தலைமுறைக்கு பின் அய்யனார்குளம்பட்டி மலை மேல் திருமலைநம்பி கோயிலுககு கும்பாபிசேகம் 22 ந்தேதி நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் திருககுறுங்குடி மலை மேல் நம்பிகோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதுபோலவே தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள அய்யனார்குளம்பட்டியில் மலை மேல் நம்பி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் இரண்டு தலைமுறையாக கும்பாபிசேகம் நடைபெறவில்லை. தற்போது பொதுமக்கள் கூடி இந்த கோயிலுக்கு திருப்பணி செய்தனர். வருகிற 22 ந்தேதி இந்த கோயில் கும்பாபிசேகம் நடைபெறுகிறது.
21 ந்தேதி காலை 5 மணிக்கு அனுக்ஞை கணபதி பூஜை, சங்கல்பம், புண்யவாஸனம், மகாகணபதி ஹோமம் நடைபெறுகிறது. அதன்பின் தீபாராதனை, கோபூஜை, நவககிரக பூஜை, சுதர்ஸன ஹோமம், தனலட்சுமி ஹோமம், மாலை 4 மணிக்கு கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. மாலை 5 மணிக்கு வாஸ்து பூஜை, எஜமானர் வர்ணம், கும்ப அலங்காரம், இரவு 8 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது. இரவு 11 மணிக்கு யந்திர பிரதிஷ்டை, மூர்த்தி பிரதிஷ்டை நடைபெறுகிறது.
22 ந்தேதி காலை 6 மணிக்கு 2 ஆம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது. காலை 7 மணிக்கு மூலமந்திர ஹோமம், காலை 9.15க்கு நூதன விமானம் மற்றும் மலைமேல் நம்பி மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பின் மகா அபிசேகம், அலங்கார தீபாரதனை, அன்னதானம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை திருமலை நம்பி கோயில் வரிதாரர்கள் செய்து வருகிறார்கள்.