ஆறாம்பண்ணை அரபாத் நகரில் மிலாது நபி விழா நடந்தது.
ஆறாம்பண்ணை அரபாத்நகரில் மிலாது நபி விழா மற்றும் மதரசா 23 ஆம் ஆண்டுவிழா நடந்தது. ஜமாத் துணை தலைவர் அன்வர் ஷா தலைமை வகித்தார். ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயில், உறுப்பினர்கள் அபுல்ஹசன், யூசுப், அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாத் செயலாளர் இமாம் அலி வரவேற்றார். ஆறாம்பண்ணை ஆயிஷா நிஸ்வான் மதரஸா முதல்வர் முகம்மது ஹனீபா, பாளையங்கோட்டை சதக்கப்துல்லா அப்பா கல்லூரி இமாம் ஷேக் அப்துல் காதிர், ஆறாம்பண்ணை இமாம் அப்துல் காதிர், அரபாத்நகர் இமாம் செய்யது ஜாபர் கொங்கராயகுறிச்சி இமாம் அபூபக்கர் சித்திக் ஆகியோர் பேசினர்.
மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபி கல்லூரி பேராசிரியர் முகம்மது இலியாஸ் சிறப்புரையாற்றினார். ஜமாத் துணை செயலாளர் நன்னி அப்துல் காதிர் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் காஜா முகைதீன், முகம்மது இபுராகீம், முகம்மது இக்பால், முகம்மது மீரான், சேக் அப்துல் காதர், அபூபக்கர் சித்திக், முஷ்தாக், தக்பீர், அப்துல் ஹகீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.