ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளுர் நடுநக்கர் மத்ய பதீஸ்வரர் சிவகாமி அம்பாள் திருக்கோவில் மாசித்தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
ஸ்ரீவைகுண்டம் அருகே அமைந்துள்ளது வெள்ளுர் நடுக்கர் மத்ய பதீஸ்வரர் திருக்கோவில். இங்கு மாசித்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழாவை முன்னிட்டு காலை அபிஷேகம்,அலங்காரம்,தீபாரதணையும்,மாலையில் வாகனங்களில் வீதி உலாவும் நடந்தது. ஒன்பதாவது திருவிழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமி நடுநக்கர் அலங்கரிக்கப்பட்டு காலை 9.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். தேரில் அலங்கார தீபாரதனை நடந்தது. பின்னர் 10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். தேர் நிலையத்தை விட்டு நகர்ந்ததும் பக்தர்கள் பக்தி பெருக்கோடு அரகரமகாதேவா,தென்னாடுடைய சிவனேபோற்றி, கோஷம் எழுப்பி பக்தி பெருக்கோடு பழம் தேங்காய் சாத்தி சாமிதரிசனம் செய்தனர். தேர் 12.45 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது.
விழாவில் தக்கார் கிருஷ்ணமுர்த்தி, செயல்அலுவலர் மகேஸ்வரி , வெள்ளுர் நடுநக்கர் மத்ய பதீஸ்வரர் சிவகாமி அம்பாள் திருக்கோவில் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் டி.ஐ.ஜியுமான மாசானமுத்து, கோவில் அன்னதான ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கருப்பசாமி, விவசாய சங்க தலைவர் அலங்காரம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோவில் ஸ்தலத்தார் ராஜப்பாவெங்கடாச்சாரி,முன்ளாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து, கூட்டுறவு வங்கி தலைவர் சொர்ணபாண்டியன், தொழில்அதிபர் மணிகன்டபூபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பொன்ராஜ், உள்ப்பட பலர் கலந்துகொண்டனர்.