செய்துங்கநல்லூரில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது.
ஊராட்சி கழக செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்தார். செந்தாமரை, ஜெயபதி, கதிரேசன், ஐயப்பன், அந்தோணிகுமார், சுடலை முத்து, சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக செயலாளர் செங்கான் வரவேற்றார். மாவட்ட கழக செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை ஆவின் சேர்மன் சின்னத்துரை, தலைமை கழக பேச்சாளர் கவிஞர்அல்லி கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட இளைரணி செயலாளர் பிச்சையா, மாநில பொதுககுழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் ஒன்றிய இணை செயலாளர் மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி ஜான்சி ராணி பாண்டியன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் மாரியப்ப கருங்குளம் உதயசங்கர், மேலசெககாரககுடி காமராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதிமுக இரண்டு வார சாதனைகள் குறித்து பொதுமககளிடையே விளககம் அளிககப்பட்டது. ஒன்றிய கழக துணை செயலாளர் சுப்பையா பாண்டியன் நன்றி கூறினார்.


