ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லு£ரியில் 55வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லுரியில் நடைபெற்ற 55வது பட்டமளிப்பு விழாவில் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் 164 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் பேசியதாவது.
பட்டம் பெரும் மாணவர்கள் தங்கள் குடும்பத்திற்கும், கல்லூரிக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். மாணவர்கள் கைபேசி மற்றும் முகநு£ல்களை தாங்கள் கற்ற கல்வியையும் நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்கையில் முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் சாதனைகள் பல புரியலாம் என பேசினார்.
விழாவிற்கு முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் சங்கர நாராயணன் முன்னிலை வகித்தார்.
கல்லுரி துறைத்தலைவர்களான விஜயகுமார்(இயற்பியல் துறை) , சுடலை(வணிகவியல் துறை) , சுப்பிரமணியன்(தாவரவியல் துறை), குழந்தைபாண்டியன்(வேதியல் துறை), தனுஷ்கோடி (விலங்கியல்துறை), நிஜார்(பொருளியல்துறை), சிவகாமிசுந்தரி(தமிழ்துறை , குமாரிலதா (கணிதத்துறை ), பிரேமலதா (ஆங்கிலத்துறை), போஸ் (வரலாற்றுத்துறை) , மாரியப்பன் (விளையாட்டு துறை) ஆகியதுறையினர் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 164 மாணவ மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.