வல்லநாடு முத்தாரம்மன் கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது.
இதையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டது. அதன் பின் அம்மனுக்கு அபிசேகம், அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன் பின் 108 விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். மழை வேண்டி சிறப்பு பிராத்தனை நடந்தது. இந்த கோயிலில் வருகிற 6 ந்தேதி கொடைவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மன் கண்திறப்பு, கணபதி ஹோமம் உள்பட முக்கிய பூஜைகள் நடைபெறுகிறது. மறுநாள் காலை தாமிரபரணி ஆற்றில்இருந்து தீர்த்தம் எடுத்து வரப்படும். அதன் பின் சிறப்பு அலங்காரம்ஆராதனை நடைபெறும். பால் குடம் எடுத்து வந்து மதிக கொடைவிழா அன்னதானம் நடைபெறும். இரவு கரக ஆட்டத்துடன் சாமக்கொடை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆதி திராவிடர் ஐக்கிய நலச்சங்கம் மற்றும் விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.