வல்லநாட்டில் ஏழை காசநோயாளிகளுக்கு உணவு பொருள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் தேசிய காசநோயகற்றும் திட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக ஏழை காசநோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தலைமை தாங்கினார். சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர்.
இந்த சூழ்நலையில் ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் உள்ள ஏழை காசநோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை சாமான்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பை இஞ்சியரிங் கன்சல்டன்ஸ் நிர்வாக இயக்குநர் அப்துல் ஆஷிக் வழங்கினார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.


