மே 23 ந்தேதிக்கு மேல் தமிழக அரசை திமுக கைப்பற்றும் வல்லநாட்டில் ஸ்டாலின் பேச்சு.
வல்லநாட்டில் ஒட்டபிடாரம் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது.
ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் 19 ந்தேதி நடைபெற வுள்ளது. இதில் வெற்றி வேட்பாளராக வழக்கறிஞர் சண்முகையா களம் கண்டுள்ளார். அவர் வெற்றி பெற உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க இங்கே வருகை தந்திருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக இந்த தொகுதி அனாதை தொகுதியாக மாறிவிட்டது. இதனால் இங்கு எந்த நலத்திட்டமும் நடைபெறவில்லை . எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீண்ட நாள் கோரிக்கையான வல்லநாடு கிராம பஞ்சாயத்தினை பேரூராட்சியாக மாற்றி தருவோம். தவல்லநாடு மான்கள் சராணலாயத்தினை மேம்மை படுத்துவோம். தாமிரபரணி ஆற்றில் மருதூர்அணைக்கட்டில் உள்ள மேலக்கால்வாய் கீழக்கால்வாய் ஆகியவை மேன்மை படுத்தப்படும். திமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க அயராது பாடுபட்டு வருகிறோம். 8 வருட காலமாக ஆட்சியில் இல்லை. ஆனாலும் மக்களுக்காக போராடும் கட்சியாகவே திமுக உள்ளது. 18 ந்தேதி ஒரு தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல். அந்த தேர்தலை பொறுத்தவரை நீங்கள் திமுக கூட்டணிக்கு சிறப்பாக வாக்களித்தீர்கள். அதற்கு மிக்க நன்றி. மோடி படித்த பட்டதாரிகளுக்கு வேலை தருவேன் என்றார். இந்த ஐந்து வருடத்தில் எந்த பட்டதாரியும் வேலைக்கு செல்லவில்லை. அதுபோலவே வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தினை மீட்டு வந்து ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று கூறினார். 15 காசு கூட அவர் டெபாசிட் செய்யவில்லை. இதுபோல் பொய் வாக்குறுதிகளை கூறி நம்மை ஏமாற்றியவர் மோடி. தூத்துக்குடியில் ஸ்டர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட இந்த மோடிக்கு நேரமில்லை. கஜா புயல் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கோரத்தண்டவம் ஆடியது. ஆனால் என்ன எது என்று கேட்கமால் ஒடிசாவில் இருந்தவர் மோடி. அவருக்கு எப்போதுமே தமிழகத்தின் மீது அக்கறை இருந்ததே கிடையாது. எனவே அவரை வருகிற 23 ந்தேதி வாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீதம் நமது கூட்டணிதான் வெற்றி பெற போகிறது. மோடியை வீட்டுக்கு அனுப்பி விட்டு நாம் நமது கூட்டணி காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியை பாரத பிரதமாராக்க போகிறோம். இதுதான் உண்மையிலும் உண்மை.
ஆனால் பி.ஜே.பி மாநில தலைவர் தமிழிசை எனக்கும் பி.ஜே.பிக்கும் ரகசிய உடன்பாடு என்று பேசிவருகிறார். அதை நிரூபித்தால் நான் எனது அரசியல் வாழ்க்கையையே முழுக்கு போட்டு விடுகிறேன். அதே நேரம் நிருப்பிக்க வில்லை யென்றால் மோடியும், தமிழசையும் அரசியலை விட்டு செல்ல தயாரா. அது போலவே தமிழக அரசு. மீதி உள்ள ஒன்றரை ஆண்டுகள் எப்படி கொள்ளையடிப்பது என்பதை எடப்பாடி கமிஷன் கரப்பசன் ஆட்சி குறி வைத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
எடப்பாடி அரசு தன்னை காப்பாற்றி கொள்ள 18 பேரை பதவி நீக்கம் செய்தது. தற்போது 22 தொகுதியில இடைத்தேர்தல் வந்தது. அதிலும் 18 தொகுதியில் தேர்தல் முடிந்து விட்டது, அதில் நாம் தான் வெற்றி பெற போகிறோம். தற்போது நமது கூட்டணி கட்சியோடு சட்டசபையில் நமது எண்ணிக்கை 97 ஆக உள்ளது. தற்போது 4 இடத்தில் இடை தேர்தல். அனைத்திலும் நமக்கு தான் வெற்றி கிடைக்க போகிறது. ஆக மொத்தத்தில் நாம் ஆட்சியை பிடிக்க 118 பேர் தேவை. ஆனால் நம்மிடம் 119 பேர் இருக்கிறார்கள். எனவே 23 ந்தேதிக்கு மேல் தமிழக ஆட்சி பீடத்தில் திமுக ஏற போகிறது என்பதில் அய்யமில்லை.
இதனால் அதிமுக 3 எம்.எல்.ஏ பதவியை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதில் ஒரு உச்சநீதி மன்றத்துக்கு சென்றுள்ளார். நாம் இதை கைகட்டி வேடிக்கை பார்க்கமுடியுமா. 5 தடவை முதலமைச்சராக இருந்த கலைஞரின் மகன் அல்லவா நான். எனவே சபாநாயகர் மேலே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். இனி அவர் எந்த எம்.எல்.ஏ மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. இதுவரை மோடி எடப்பாடியை காத்து வந்தார். இனி யாரும் எடப்பாடியை காப்பாற்ற முடியாது.
தமிழக முதல்வராக கலைஞர் இருந்த போது பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி வந்தார். பெண்களுக்கு சம உரிமை பெற்றுதந்தார். வேலை வாய்ப்பில் 30 சதவீத இட ஓதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத ஓதுக்கீடு, ஆரம்பபள்ளியில் பெண்களை ஆசிரியராக நியமனம் செய்வது, கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு திட்டம், விதவை மறுவாழ்வு திட்டம், பெண் குழந்தைகள் திருமண உதவி திடடம் மகளிர் சுய உதவிகுழு என பல கொண்டுவந்தார். அதே வரிசையில் 50ஆயிரம்பெண்களுக்கு வட்டியில்லா கடன், 50லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை. 1 கோடி பேருக்கு சாலைப்பணியாளர் வேலை. கேஸ் விலை இறக்கம் , கேபிள் டிவி விலை இறக்கம் என அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஏழை எளிய மக்களுக்கு கடன் தள்ளுபடி திட்டம் , பெண்கள் அடமானம் வைத்த 5பவுன் நகை திருப்ப மானியம் உள்பட பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அவர் பேசினார்.
அதன் பின் அவர் தெய்வச்செயல்புரம், அக்கநாயக்கன்பட்டி, பரிவல்லிகோட்டை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். கருப்பசாமி பாண்டியன், அனிதாராதாகிருஷ்ணணன் எம்எல்.ஏ , டி.பி.எம். மைதீன் கான், மாலைராஜா, உமரி சங்கர், சொர்ணகுமார், ஆறுமுகபெருமாள் உள்பட பலர் உடன் வந்தனர்.
சொன்னதை செய்வான். செய்வதையே சொல்வான்…
திமுக தலைவர் முகஸ்டாலின் பேசும் போது, எனது தந்தையின் தாரக மந்திரம் சொன்னதை செய்வோம், செய்வதையே சொல்வோம் என்பதே . அதே வழியில் அவரது மகனான நான் சொன்னதையே செய்வான், செய்வதையே சொல்வான். என்னிடம் எடப்பாடி வலாட்ட முடியாது. நான் கலைஞரின் மகன். என் தந்தையை எதிர்த்தவர் கதி உங்களுக்கு தெரியும். அதே வழியில் எதிரிகளை முறியடிப்பேன்
கனிமொழி வெற்றி உறுதியானது
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும் போது, தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என் தங்கை கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார் என்றுபேசி விட்டு , மக்களை பார்த்து கனிமொழி வெற்றி உறுதி தானே என்று கேட்டார். பெண்கள் அனைவரும். உறுதி. வெற்றி உறுதி வெற்றி உறுதி என சந்தோஷமாக சத்தமிட்டனர். அதுபோலவே வழக்கறிஞர் சண்முகையா அவர்களையும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று பேசினார்.
சீரியலை மறந்து வந்த பெண்கள்
கிராமத்தில் உள்ள பெண்களுக்கு ஒரே ஒரு பொழுது போக்கு தொலைக்காட்சி பார்ப்பது தான். இப்போது கூட நீங்கள் சீரியலை எனக்காக விட்டு விட்டு என் கூட்டத்தில் பங்கெடுக்க வந்து உள்ளீர்கள். திமுக ஆட்சி இருந்த போது 100 ரூபாய்தான் கேபிள் கட்டணம். ஆனால் இப்போது 300 ருபாய் ஆகி விட்டது. ஆனால் முட்டாள் முதலமைச்சர் கலைஞர் டிவி, சன் டிவி கட்டணத்தினை குறைக்க வில்லை என எங்களை குற்றஞ்சாட்டுகிறார். பாவம் அவருக்கு இந்த கட்டணத்தினை நிர்ணயம் செய்வது மத்திய அரசுதான் என்ற அடிப்படை அறிவு கூட இல்லை என பேசினார்.


