
வல்லநாட்டில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் போலிசார் அத்துமீறலால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வல்லநாட்டுக்கு சரியாக 5.45 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பேச வந்தார். அவர் வருவதற்கு முன்பு மிக அதிகமான பெண்கள் வல்லநாட்டில் வந்து காத்து நின்றனர். தங்கள் கைகளில் கொடியை வைத்துக்கொண்டு,இடுப்பில் குழந்தைகளை வைத்து கொண்டு நின்றனர். இதற்கிடையில் போலிசார் ஏ.டி.எஸ்.பி வேடரத்தினம் தலைமையில் கலியாவூர் சாலையில் பெண்களை செல்ல வலியுறுத்தினர். நாலுவழிசாலையில் இருபுறமும் பெண்கள் கூட்டம் அதிகமாக கூடியது. ஆனால் போலிசார் போக்குவரத்தினை சீர் செய்யாமல் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டுகொள்ளாமலும் அலட்சியமாக நின்றனர். கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி வருவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பே போக்குவரத்தினை வேறு பாதையில் மாற்றி விட்ட போலிசார். கூட்டம் அதிகமாக இருந்தும் அவர்களை சாலை ஓரத்தில் கட்டுபடுத்த முயற்சி செய்தார்களே தவிர ஒரு வழி பாதை வழியாக கூட மாற்றி விட ஏற்பாடு செய்யவில்லை. இதனால் பெண்கள் ஒரு பக்க நாலு வழிச் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த போரட்டத்தில் கருப்பசாமி பாண்டியன், டி.பி. மைதின்கான் எம்.எல்..எ, மாலை ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். அதன்பின் போலிசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். போக்குவரத்தினை ஒரு வழியாக மாற்றி அமைத்த பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுந்து ஸ்டாலினை வரவேற்க தாயரானார்கள்.