வல்லநாடு சிவன் கோயிலில் உழவாரபணி சார்பில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.
வல்லநாடு ஆவுடையம்மாள் சமேத திருமூலநாதர் ஆலயம் மிகவும் பழமையானது. இந்த ஆலயத்தில் தொடர்ந்து தூத்துக்கடி சதுரகிரி ஸ்ரீமகாலிங்க சுவாமி அறககட்டளை சார்பில் உழவாரப்பணி நடந்து வருகிறது. இதில் படிப்படியாக கருவேலமரங்களை அகற்றுதல், மதில் சுவர்களில் முளைத்துள்ள மரங்களை வெட்டுதல், உள்பட பல பணிகளை செய்து வந்தனர். தற்போது கோயில் தெப்பக்குளம் அருகில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.
வல்லநாடு பாரதி மழலையர் துவக்கப்பள்ளி தாளாளர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். சேதுராமலிங்கம், வெயில்முத்து, சண்முகம் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவாரப்பணிக்குழு தலைவர் ராமமூர்த்தி சுவாமிகள் உயர் மின் கோபுர விளககினை இணைப்பு கொடுத்து துவக்கி வைத்தார்.
ஓய்வு பெற்ற காவல் துணை ஆய்வாளர் சங்கரன், ஆனந்தி சரவணன், சாந்தி சேதுராமலிங்கம், ரத்னா சங்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அர்ச்சகர் சண்முக பட்டர் செய்திருந்தார்.


