கருங்குளம் குலசேகரநாயகி சமேத மார்த்தாண்டேஸ்வரர் ஆலயத்தில் சூரசம்ஹார விழா நடந்தது.
இதையொட்டி அதிகாலையில் நடை திறககப்பட்டது. குலசேகர நாயகி மற்றும் மார்த்தாண்டேஸ்வரரு’கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. மாலை 5 மணி அளவில் சூரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் சப்பரத்தில் புறப்பட்டார். கோயில் முன்பு அவர் வந்த போது அவரை சூரன் எதிர்கொண்டார். இருவருககும் போர் மூண்டது. சூரன் சிங்கம் , யானை, மாஇலை கோலங்கொண்டு முருகனிடம் மாயஜாலம் செய்து போரிட்டார். முருகப்பெருமான் தனது தாயார் கொடுத்த வேலால் தலையை கொய்தார். இறுதியில் சேவல் ரூபம் கொண்டு முருகப்பெருமானை வலம் வந்து அவரை சரணகதியடைந்தார்.
இந் நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமசந்திரன் உள்பட ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டனர். கருங்குளம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் மகராஜன் மண்டகபடியை மிகச்சிறப்பாக செய்திருந்தார்.