வல்லநாடு நூலகத்தில் நூலக வார விழாநடந்தது.
வாசகர் வட்ட தலைவர் இசக்கி தலைமை வகித்தார். பாரதி மழழையர் பள்ளி தளாளார் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். நூலகர் தளவாய் வரவேற்றார். பள்ளிமாணவர்களிடைய பேச்சு, கட்டுரை, கவிதை உள்பட பல போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாசகர்கள் முத்தையா, தம்பு செல்வம், சங்கர், சங்கரலிங்கம், முத்து, முருகன், சரஸ்வதி, மணிமேகலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடத்தியிருந்தது.