காவிரி பாலாற்றை விட மிக மோசமாக நீதி துறை தான் உள்ளது என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சுவாமி நாதன் வேதனையடைந்துள்ளார்.
நம் தாமிரபரணி இயக்கத்தின் சார்பாக தாமிரபரணியை சுத்தப்படுத்து வோரையும், மஹா புஷ்கத்தினை சிறப்பாக நடத்தியவோருக்கும் விருது வழங்கும் விழா பாளையங்கோட்டை மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளியில் வைத்து நடந்தது. நம் தாமிரபரணி பொறுப்பாளர் வித்தியாசாகர் தலைமை வகித்தார். அண்ணா பல்கலைகழக முதல்வர் சக்திநாதன் முன்னிலை வகித்தார். பொறுப்பாளர் நல்லபெருமாள் வரவேற்றார். முன்னாள் ஐ.ஜி. மாசனமுத்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கர், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சுவாமி நாதன் ஆகியோர் பேசினர்.
நீதிபதி சுவாமி நாதன் பேசும் போது, பாலாறு, காவிரியாறு இவற்றை விட நீதித்துறைதான் மிக மோசமாக உள்ளது. தாமிரபரணி மிக மோசமாக காரணம் ஆக்கிரமிப்பும் மணல் கொள்ளையும் தான். அதை தடுக்க ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ். கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் மூலமாக வழக்கறிஞராக என்னிடம் வழக்கு வந்தது. அப்போது நல்லகண்ணு அய்யா மூலமாக ஐந்து வருடம் தடை உத்தரவு பெற்றோம். அதுபோல தற்போது தாமிரபரணியை பாதுகாக்க உங்களைபோன்ற மக்கள் சக்திநாதன் தலைமையில் கூடியிருக்கிறீர்கள். நீங்கள் நிச்சயம் தாமிரபரணியை காப்பாற்றி விடுவீர்கள். உங்களை போன்றவர்களால் தான் எங்களுக்கும் சக்தி கிடைக்கிறது. என்று பேசினார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நவீன தாமிரபரணி மஹாத்மியம் நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ தர்மலிங்கம், ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ். கல்லூரி செயலாளர் சங்கர நாரயணன், ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், உழவாரப்பணி குழு முத்து கிருஷ்ணன், பாபநாசம் மைக்கல், கிராம உதயம் இயக்குனர் சுந்தரரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தாமிரபரணி துப்புறவு பணி மேற்கொண்டவர்கள் மற்றும் மஹா புஷ்கரத்தினை மிகச்சிறப்பாக நடத்தியவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து தாமிரபரணியை காப்பாற்ற செய்ய வேண்டிய கடமைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஜெயந்திரா மணி நன்றி கூறினார்.