
ஆழ்வார்திருநகரி கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழாவும் , நல்லாசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் பிச்சைராஜா தலைமை வகித்தார். தாரங்கதரா ஓய்வு பெற்ற துணை மேலாளர் சேவுகிரி , மக்கள்நலச்சங்க உறுப்பினர் ஹமீது ரஸ்வி ஆகியோர் முன்னிலை வகித்தார். மூக்குபீறி கிளை நூலகர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இராமசாமி பாராட்டப் பட்டார்.
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் பாக்யநாதன், மக்கள் நலசங்க உறுப்பினர் கோமதி நாயகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் பள்ளி மாணவ மாணவிய ர்களிடம் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள் கோமான், உமா, நூலகர்கள் கிருஷ்ணமூர்த்தி, பொன்னையா, பாளை சேவியர்கல்லூரி விரிவுரையாளர் முருகேசன், பொதுப்பணித்துறை அழகிய நம்பி, கூட்டுறவு துறை கிருஷ்ணன், வியாபாரிகள் சங்க செயற்குழு உறுப்பினர் முகைதீன், சமூக சேவகி லெட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நூலகர் சம்சுதீன் நன்றி கூறினார்.