திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு (ஆக. 11) புதன்கிழமை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கரோனா பொதுமுடக்க தளா்வுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை 5 முதல் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே, தொற்று பரவலைத் தடுக்க கடந்த 1ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதன்படி, 8 நாள்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 6 முதல் மாலை 6 மணி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
எனினும், கூட்டம் குறைவாக இருந்ததால் கோயில் வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது. தமிழக அரசின் உத்தரவுப்படி, இம்மாதம் 23ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறுதோறும் கோயில்களில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆடிப்பூரத்தையொட்டி, இன்று புதன்கிழமை திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்துசெய்யப்பட்டுள்ளதுகடல், நாழிக்கிணற்றில் புனித நீராடவும் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.