சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 23 பேர் கைது – 175 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய். 2,470/- பணமும் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று (09.08.2021) தூத்துக்குடி வடபாகம், மத்தியபாகம், தென்பாகம், தாளமுத்துநகர், திருச்செந்தூர், திருச்செந்தூர் கோவில், ஆத்தூர், குலசேகரபட்டினம், கோவில்பட்டி கிழக்கு, விளாத்திகுளம், மாசார்பட்டி, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 13 காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 23 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 175 மதுபாட்டில்களும், ரூபாய். 2,470/- பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


