தாமிரபரணி புஷ்கரத்தினை முன்னிட்டு தாமிரபரணி மற்றும் அகத்தியர் குறித்து சாரதா கல்லூரியில் கொலு வைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் நடைபெறுகிறது. 144 வருடத்துக்கு ஒரு முறை நடைபெறும் மகா புஷ்கரம் என்பதால் பலரும் இங்கு வந்து நீராடஉள்ளனர். ஒவ்வொரு இடத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதுபோலவே பாளையங்கோட்டை அரியகுளத்தில் தாமிரபரணி மற்றும் அகத்தியர் வரலாறுகளை விளககும் கொலு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலுவில் தாமிரபரணி உருவாகும் இடத்தில் தண்ணீர் பொதிகை மலையில் இருந்து கொட்டுவது போலவும், அது கடந்து வந்த பாதை குறித்தும் கொலு வைக்கப்பட்டுள்ளது. ரங்கோலி மூலமாக மிகப்பெரிய அகத்தியர் படம் உருவாககப்பட்டுள்ளது. மேலும் தாமிரபரணியில் நடந்த புராண கதைகளை விளக்கும் விதமாக கஜேந்திர மோட்சம், உள்பட பல வரலாறுகள் கொலுவில் சித்தரிககப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாரதா கல்லூரி செயலாளர் எத்தீஸ்வரி சரவணபவ பிரியா அம்பா அவர்கள் கூறும் போது, வருடந்தோறும் வித்தியசமாக கொலுவைப்பது வழக்கம். இந்த ஆண்டு தாமிரபரணி புஷ்கர திருவிழா நடைபெறுவதால், புஷ்கரம் குறித்தும் தாமிரபரணி தோற்றம் குறித்தோம். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களின் சித்தர்களின் சொர்ககபுரி பொதிகை மலை, தாமிரபரணி மகாத்மியம் என்ற நூலை அடிப்படையாக கொண்டு அகத்தியர் வரவு குறித்தும் கொலு வைக்கலாம் என திட்டம் தீட்டினோம். அதற்காக கல்லூரியில் தனி தனியாக சாரதா, கதாதர், விவேகானந்தர், நிவேதிதா ஆகிய நான்கு குழுவாக அமைத்து இந்த பணியை செய்தோம். தற்போது மக்களை கவரும் வண்ணம் இந்த கொலு அமைந்துள்ளது என்றார்.
இந்த கொலுவை பொதுமக்களும் கண்டு களிக்கலாம். கொலு வைத்த கல்லூரி நிர்வாகத்தினை பார்வையாளர்கள் பாராட்டினார்கள்.


