
10 வருடங்களாக அரசு கண்டுகொள்ளாத வல்லநாடு அகரம் பாலத்தினை இரவோடு இரவாக பொதுமக்களே சீரமைத்தனர்.
வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராம் மிகவும் சிறப்பு பெற்றது. இங்கு 10 அவரத்தினை தனது பக்தைக்கு பகவான் காட்டி அருளினார். எனவே இந்த தீர்த்தக்கட்டத்தினை தசவாதர தீரத்தகட்டம் என அழைககப்படுகிறது. இங்கு புஷ்கர திருவிழாவை முன்னிட்டு மககள் நீராட அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதற்கிடையில் இவ்வூருக்கு வரும் சாலையில் மருதூர் கீழககாலில் பாலம் ஒன்று 10 வருடத்துக்கு முன்பு உடைந்து விழுந்தது. இந்த பாலம் போககுவரத்துக்கு லாயகற்று கிடத்து. அரசும் இந்த பாலத்தினை கட்ட எந்த நடவடிக்கையும் எடுத்தது போல தெரியவில்லை. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு அகரம் பொதுமக்கள் இணைந்து சாது சிதம்பர சுவாமிகளின் அறககட்டனை சார்பாக இந்த பாலத்தினை சீரமைத்தனர். இரவு 10 மணி அளவில் ஊர்மககள் கூடி அவர்களே கம்பி அமைத்து கான்கீரிட் அமைத்தனர்.
இதுகுறித்து இவ்வூரை சேர்ந்த ஜெகநாதன் கூறும்போது, நாங்கள் பல முறை மனு செய்தும் அரசு நடவடிக்கை இல்லை. ஆனால் மகா புஷ்கரத்தினை முன்னிட்டு ஏரளமான பகதர்கள் இந்த வழியாக வந்து செல்வார்கள். அவர்களுக்காக நாங்கள் பொதுமக்கள் கூடி நடவடிக்கை எடுத்தோம். தற்போது இந்த வழியாக ஆட்டோ உள்பட கனரக வாகனங்கள் செல்ல முடியும். ஆனால் கைபிடிச்சுவர் இல்லாத காரணத்தினால் மெதுவாக வாகனங்கள் சென்று வரவேண்டும் என அவர் கூறினார்.
மகாபுஷ்கர திருவிழாவை முன்னிட்டு அரசு கண்டுகொள்ளாத பாலத்தினை பொதுமக்கள் சீரமைத்தை பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.