
செய்துங்கநல்லூரில் திருவரங்கச்செல்வியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் சித்திரை விசு விழா மிகச்சிறப்பாக நடைபெறும். அம்மன் பழத்தினால் அலங்கரிக்கப்படுவார். இதை சித்திரை விசு கனி காணுதல் என்பவர். அதன் பின் காலை சப்பரத்தில் கருங்குளம் ஆற்றுக்கு தீர்த்தவாரி சென்றுவருவார். இரவு அன்னதான சத்திரத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வருவார். வீதிதோறும் அம்மனை எதிர்பார்த்து பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்வார்கள் . இந்த ஆண்டுகொரனா வைரஸ் காரணமாக ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் உள்ளனர். இதற்கிடையில் தீர்த்தவாரியும், சப்பர பவனியும் நிறுத்தப்பட்டு விட்டது.
செய்துங்கநல்லூரை பொறுத்தவரை தொடர்ந்து மூம் மதங்கள் மூலமாகவும் விழாக்கள் நடைபெறும். கிறிஸ்தவர்கள் நடத்தும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம், திருவரங்கச்செல்வி அம்மன் சப்பர பவனி முஸ்லிம் தொழு¬ க இவை அனைத்தும் நிறத்தப்பட்ட, அவர் வீட்டில் வைத்தே தங்களது இறைவனை நோக்கி வணங்கி வருகிறார்கள் இதே போல் முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயிலில் நடைபெறும் தாமிரபரணி தீர்த்தவாரியும் இந்த ஆண்டு நடைபெறவில்லை. இதற்கிடையே செய்துங்கநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.