செய்துங்கநல்லூர் அருகே உள்ள தெற்கு வெட்டியபந்தியில் சேவியர் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் நடந்தது.
பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி காட்சி தொடர்பியல் இளம் கலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு கிராம மேம்பாடு செயல் திட்டம் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி தெற்கு வெட்டியபந்தி கிராமத்தில் நடந்தது.
முகாமை டாக்டர் ஜெயம் ஜீலியட் துவக்கி வைத்து மருத்துமுகாம் நடத்தினார். மகளிர் மேம்பாட்டு திட்டம் மற்றும் மகளிருக்கான பயிற்சியை உமா மகேஸ்வரி செயல்முறை பயிற்சியாக நடத்தி காட்டினார். கிராமத்தில் மாணவர்கள் மரம் நடும் நிகழ்ச்சி மற்றும் புகைப்பட கண்காட்சி நடத்தினர். முதல் நாள் கிராமத்தில் எடுத்து புகைப்படங்களை அந்த கண்காட்சியில் காட்சி படுத்தினர். அதை உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் ஜோஸ்பின், பேராசிரியர் பென்னி கலந்துகொண்டனர்.
நிறைவு விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஜோஸ்பின் வரவேற்றார். பண்பலை அறிவிப்பாளர் கிருத்திகா கணேஷ் சிறப்புரையாற்றினார். உள்ளூர் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி இயக்குனர் எலியாஸ் ஜோஷா தலைமையில் மேற்பார்வையாளர் சுடலை மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.


