சாத்தான்குளத்தில் இயங்கி வந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி தற்போது அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் புதிதாக கல்லூரிக்கு முதல்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை கண்டித்து கல்லூரியில் பணிபுரிகின்ற 42 ஆசிரியர்கள் மற்றும் 1400 மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆசிர்வாதபுரம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இலவச மருத்துவமுகாமை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது.
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியமான ஒன்று. தமிழ் நாகரீகத்தை பற்றிய மிக முக்கியமான கண்டுபிடிப்புகள், ஆதிச்சநல்லூரில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால் அதற்கு தரப்பட வேண்டிய முக்கியத்துவம் தற்போது வரை தரப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் இங்கு நடந்த அகழ்வாய்வின் அறிக்கை தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதுசம்பந்தமாக மத்திய அரசுக்கு நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன். மேலும் பல முறை கோரிக்கை வைத்தும் கூட சென்ற டிசம்பர் மாதம் அறிக்கை வெளியிடப்பட்டும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை அதன் அறிக்கையை வெளியிடப்படவில்லை. எனவே ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாய்வின் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். மேலும் மத்திய அரசு ஆதிச்சநல்லூர் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மாநில அரசு சார்பில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு பணிகள் துவங்கும் என்று கூறியிருந்தனர். ஆனால் அதற்கான எந்தவிதப்பணிகளும் தற்போது வரை துவங்கவில்லை. எனவே உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் கூறினார்.
அப்போது அவருடன் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பனிர் அனிதா ராதா கிருஷ்ணன் உடனிருந்தார்.


