தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் ஸ்ரீவைகுண்டம் வட்டக் கிளை சார்பில் ஓய்வூதிய சங்க அமைப்பு தினம் நடந்தது.
செய்துங்கநல்லூர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த தினத்துக்கு திருவைகுண்டம் வட்ட செயலாளர் அப்துல் ஜாபர் தலைமை வகித்தார். சாத்தான்குளம் வட்டத்தலைவர் ஜேசுதாசன், சிங்கராயர், திருச்செந்தூர் வட்ட தலைவர் மெய்கண்ட முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சின்னத்தம்பி வரவேற்று பேசினார்.
திருச்செந்தூர் வட்ட செயலாளர் சிவஆழ்வார், சாத்தான்குளம் வட்ட செயலாளர் சுப்பையா, மாவட்ட துணைத்தலைவர் மணியன், ஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் சார்லஸ், மாவட்ட செயலாளர் கலிலூர் ரகுமான், மாவட்ட தலைவர் அய்யாக்குட்டி, திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பேசினார். குணசிங் நன்றி கூறினார்.


