ஆறாம்பண்ணையில் ரம்ஜான் பண்டிகை நடந்தது. முகைதீன் பள்ளிவாசல் திடலில் வைத்து நோன்பு பெருநாள் சிறப்புத் தொழுகை நடந்தது. பள்ளிவாசல் துணை இமாம் ஹனீப் தொழுகையை நடத்தினார். தலைமை இமாம் அப்துல்காதீர் பெருநாள் குத்பா பேரூரை நிகழ்த்தினார். ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைவர் முகம்மது உதுமான்,செயலாளர் முன்னா முகம்மது, பொருளாளர் அபு அசான், எஸ்.எம். அப்துல் கனி, ஏ. அப்துல் கனி,சேக் அப்துல் காதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


