
செய்துங்கநல்லூரில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் ரம்ஜான் விளையாட்டு விழா நடந்தது. ஜாமியா பள்ளி வாசல் மைதானத்தில் நடந்த விழாவை கிளை தலைவர் சமீன் அன்சாரி தலைமை தாங்கி துவங்கி வைத்தார். போட்டியில் காலை 10 மணிக்கு துவங்கி இரவு 10 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த போட்டியில் குழந்தைகள், வாலிபர்கள், முதியவர்கள் என பிரிக்கப்பட்டு விளையாட்டு போட்டி நடந்தது. சிறுவர் சிறுமிகளுக்கான முறுக்கு கடித்தல் போட்டி, சாக்கு போட்டி, மியூசிக்கல், சேர், லெபன் ஸ்பூன் போட்டிகள் மற்றும் பெரியவர்களுக்கு கயிறு இழுத்தல், வாலிபர்களுக்கு கபடி போட்டி நடந்தது. கெம்ஸ் பிராண்ட் ஆப் இந்தியா மாநில துணைதலைவர் கஸ்ஸாலி மீரான், தூத்துக்குடி மாவட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் தலைவர் அப்துல் காதர் ஆகியோர் பரிசு வழங்கினார்.