செய்துங்கநல்லூரில் குடியரசு தினவிழாவையட்டி கொடியேற்று விழா நடந்தது.
செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்றத்தில் தேசிய கொடியேற்றப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை வகித்தார். பஞ்சாயத்து கிளார்க் சங்கரபாண்டியன் வரவேற்றார். துணை தலைவர் இசக்கியம்மாள் முன்னிலை வகித்தார்.
பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தேசிய கொடியேற்றி வைத்தார். உறுப்பினர்கள் பட்டுராஜன், அபுபைதா, முருகன், அப்துல்காதர், பொன்னையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.